சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 198 நர்சுகள் டிஸ்மிஸ் - சிபிம் கடும் கண்டனம்

சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒரு வார காலமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், ஸ்ட்ரைக் முடிந்துவிட்டதாகவும் அப்பல்லோ மருத்துவமனை அறிவித்திருந்தது.
ஆனால் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட 198 நர்ஸ்களை நீக்கியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3ம் தேதி மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் (எம்.எம்.எம்), அப்பல்லோ, போர்ட்டீஸ் (மலர்) மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்சுகள் வேலை நிறுத்த பேராட்டத்தை தொடங்கினர்.
இதனையடுத்து எம்.எம்.எம், போர்ட்டீஸ் மருத்துவமனை நிர்வாகங்கள் நர்சுகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஊதிய உயர்வு வழங்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
ஆனால் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நர்சுகளை அழைத்து பேசாமல் பேராட்டத்தில் கலந்து கொண்ட 198 செவிலியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் விடுதிகளில் மின்சாரத்தை துண்டித்தும், உணவு அளிக்க மறுத்தும் விடுதிகளை பூட்டியும் பழி தீர்த்துள்ளது.
எனவே அப்பல்லோ மருத்துவமனை நர்சுகளுக்கு உடனடியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். நர்சுகளின் கோரிக்கை வெற்றி பெறும் வரை போராட்டம் தொடரும். அதற்கு நாங்களும் துணை நிற்போம்.
பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறையும் இப்பிரச்சனையில் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications