தமிழக மேல்சபை ரத்து மசோதா - விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல்
சென்னை: தமிழ்நாட்டில் மேல்சபை அமைவதை ரத்து செய்வதற்கான சட்ட திருத்த மசோதா அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.
1986-ல் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் மேல்சபை ரத்து செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சியின்போது மீண்டும் மேல்சபை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. கடந்த தி.மு.க. ஆட்சியில் 2010-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி மேல்சபை அமைப்பதற்கான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, 2010 மே மாதம் 4-ந்தேதி கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் மீண்டும் மேல்சபை அமைக்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டில் மீண்டும் மேல்சபை அமைக்கும் மசோதா நிறை வேற்றப்பட்டது.
கடந்த ஆண்டும் மீண்டும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டிற்கு மேல்சபை தேவை இல்லை என்று கடந்த மே மாதம் 24-ந்தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின் நகலை, நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமார், மாநிலங்களவைத் தலைவரும் துணைத் தலைவருமான ஹமீத் அன்சாரி ஆகியோரிடம் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கொடுத்தனர்.
என்றாலும், குளிர்காலக் கூட்டத் தொடரின் போது தமிழ்நாட்டில் மேல்சபை அமைப்பதை ரத்து செய்யும் தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவில்லை. ஆனால் இந்த முறை நாடாளுமன்றம் கூடும்போது, தமிழ்நாட்டில் மேல்சபை அமைப்பதற்காக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டத்தை திரும்ப பெறுவதற்கான மசோதா கொண்டு வரப்படுகிறது.
மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்து விட்டது. தமிழ்நாட்டில் மேல்சபை அமைக்கும் சட்டத்தை திரும்ப பெறும் சட்டத்திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற நிதிநிலைக் கூட்டத் தொடரின்போது, தாக்கல் செய்யப்படும். அடுத்த வாரம் இதை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சல் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications