சங்கரன்கோவில் இடைத்தேர்தல் திமுகவுக்கு திராவிடர் கழகம் ஆதரவு
சென்னை சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்துக்கோ நடைபெறும் இடைத்தேர்தல்களின் முடிவு பெரும்பாலும் ஆளும் கட்சிகளை பதவி இறக்கம் செய்வது இல்லை. மாறாக ஆட்சியில் உள்ள கட்சிக்கு மக்களின் உணர்வுகள், வாக்காளர்கள் எப்படி தற்போது உள்ளார்கள் என்று காட்டும் அரசியல் அளக்கும் கருவியாகவே பயன்படுகின்றது.
கடந்த 10 மாதங்களாக பதவியில் உள்ள அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து உரைகல்லாக இந்த இடைத்தேர்தல் பயன்படலாம். உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றால் தெரிவிக்கப்பட்ட கண்டனங்கள், விமர்சனங்கள் போன்றவை மூலம் அதிமுகவின் ஆட்சி எப்படி நடைபெறுகின்றது என்பதற்கு சிறந்த சான்றுகளாகும்.
அரசியல் ரீதியாகவும், லட்சிய ரீதியாகவும் திராவிட இன உணர்வு அடிப்படையிலும் போட்டியிடும் முக்கிய கட்சியாக திமுக களத்தில் இறங்கியுள்ள நிலையில் திமுக வேட்பாளரை, திராவிடர் கழகம் ஆதரிக்கும்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் ஜனநாயகத்திற்கு ஒரு சோதனை என்ற போதிலும், மக்கள் உணர்வுகளைப் பெரிதும் பிரதிபலிக்க ஓரளவு பயன்படக் கூடும் என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்து என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications