இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்! - ஞானதேசிகன்

Subscribe to Oneindia Tamil

Gnandesigan
சென்னை: ஐநா மனித உரிமைச் சபையில் இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு விசாரணை கோரும் அமெரிக்க தீர்மானத்தை இந்தியா முழுமையாக ஆதரிக்க வேண்டும், என தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இருந்ததாக ஐ.நா. சபை அமைத்த மூவர் குழு அறிக்கை தந்திருக்கிறது. இலங்கையில் மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கிறது என்று அறிந்த பிறகு மனிதர்களின் உரிமைக்கு முக்கியத்துவம் தருகிற இந்தியத் திருநாடு குரல் கொடுத்தாக வேண்டும்.

இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் பரிவாக இருந்திருக்கிறது.

இலங்கை தமிழர்களுக்கு அன்னை இந்திராகாந்தி காலத்திலிருந்து உதவிக்கரம் நீட்டியது காங்கிரஸ் கட்சிதான் என்பதை நினைவு கூற ஆசைப்படுகிறேன். இந்த போருக்குப் பின்னும் கூட தமிழர் பகுதிகளில் ரெயில் பாதைகள் அமைப்பது, வீடுகள் கட்டித்தருவது, யாழ்ப்பாணம் பகுதியில் தூதரகம் திறந்தது, கல்விக் கூடங்களை சீரமைத்து விவசாயத்திற்கு டிராக்டர்கள் வழங்கியது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான். இன்னும் உதவி செய்து கொண்டிருப்பதும் மத்திய அரசுதான்.

கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசனும், மத்திய அமைச்சர் நாராயணசாமியும் இந்த தீர்மானத்தை ஆதரிக்க வற்புறுத்தியிருப்பதை நான் சுட்டிக்காட்ட விரும் புகிறேன். இப்போது தீர்மானம் வந்துவிட்ட நிலையில் இந்திய அரசு அந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன். நேரடியாக வற்புறுத்துவேன். ஆதரிக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+