ஏமனில் அமெரிக்க போர்விமான தாக்குதலில் 33 அல் கொய்தா தீவிரவாதிகள் பலி
சனா(ஏமன்): ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலி்ல் 33 அல் கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏமனில் அல் கொய்தா தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் உள்ள மலைப்பகுதியான அல் பாய்தா மாகாணத்தில் அமெரிக்க போர்விமானங்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாதிகள் 27 பேர் பலியாகினர்.
அல் பாய்தா மாகாணத்தில் உள்ள அல் மக்னாஹ், அல் தூஹி மற்றும் அல் மம்துத் ஆகிய 3 கிராமங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று ஏமன் நாட்டு விமானங்கள் அபியான் மாகாணத்தின் தென்பகுதியில் நடத்திய தாக்குதலில் 6 அல் கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 4ம் தேதி அபியான் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 185 வீரர்கள் பலியாகினர்.
அதன் பிறகு அல் கொய்தா தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்டுள்ள முதல் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் பூர்வீகம் ஏமன் ஆகும். ஏமனில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களைப் பயன்படுத்தி அல் கொய்தா அந்நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்துள்ளது.












Click it and Unblock the Notifications