பிரச்சாரத்தின்போது சந்திரபாபு நாயுடு மீது தெலுங்கானா கட்சியினர் செருப்பு வீச்சு
நிசாமாபாத்: இடைத்தேர்தலை முன்னிட்டு நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள பரிடுபேட் கிராமத்தில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியினர் செருப்புகளை வீசினர். மேலும் அவரது வேன் மீது கற்களை வீசினர்.
ஆந்திர மாநிலத்தில் வரும் 18ம் தேதி 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் கோவூரில் மட்டும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகளில் அது போட்டியிடவில்லை. ஆனால் தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 7 தொகுதிகளிலும் களத்தில் உள்ளன. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று தெலுங்கானா பகுதி நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள பரிதுபேட் கிராமத்தில் தனது கட்சி வேட்பாளர் நிட்டு வேணுகோபால் ரெட்டியை ஆதரித்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்ர். ஆனால் அவரை அங்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என்று கூறி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தொண்டர்கள் அவரது வேனை முற்றுகையிட்டனர். இருப்பினும் அவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சந்திரபாபு நாயுடு மீது செருப்புகளை வீசினார்கள். அவை அவரது வேனில் பட்டு கீழே விழுந்தன. மேலும் சிலர் நாயுடுவின் வேன் மீது கற்கள் வீசித் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர் மீது செருப்புகளை வீசியவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications