மின்தட்டுப்பாட்டுக்கு திமுக தான் காரணம்: செ.கு.தமிழரசன் குற்றச்சாட்டு
நெல்லை: திமுக ஆட்சியில் மின்சாரம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக இந்திய குடியரசு கட்சியின் தமிழக தலைவர் செ.கு.தமிழரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து எங்கள் கட்சியின் சார்பில் நானும், கட்சி நிர்வாகிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றோம். சங்கரன்கேவில் தொகுதி அதிமுகவின் கோட்டை ஆகும். எனவே, அங்கு மீண்டும் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
கடந்த 9 மாத கால ஆட்சியில்முதல்வர் ஜெயலலிதா தலித் மக்களின் வளர்சிக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனக்கு கிடைத்த எதிர்கட்சி தலைவருக்கான மரபையும், மான்பையும் காப்பாற்ற தெரியாதவர். திரைப்பட காட்சிகளில் வரும் குழாயடி சண்டை காட்சிகளில் நடிப்பது போல் சட்டமன்றத்திலும் செயல்படுகிறார். அவரது கட்சிக்கு நோக்கம், கொள்கை, திட்டங்கள் என்று எதுவுமில்லை.
தமிழகத்தில் தற்போதது நிலவி வரும் மின் தட்டுப்பாட்டிற்கு கடந்த முறை ஆட்சியில் இருந்த திமுகவின் நிர்வாக சீர்கேடுகள்தான் காரணம். கடந்த திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் ரூ. 40,000 கோடி இழப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சியில் மின்சாரம் வாங்கியதில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது.
தமிழகத்தில் மின்தட்டுப்பாட்டை போக்க முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். எனவே சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் மின்வெட்டை காரணம் காட்டி மக்களை ஏமாற்ற முடியாது என்றார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications