ஹஜ் ஒப்பந்தம்: 14ல் சவூதி அமைச்சரை சந்தித்து பேசும் இந்திய உயர்மட்டக் குழு
ஜெத்தா: 2012ம் ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்திய, சவூதி அரேபியா உயர் மட்டக் குழு கூட்டம் வரும் 14ம் தேதி ஜெத்தாவில் நடக்கிறது.
2012ம் ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்திய மற்றும் சவூதி அமைச்சர்கள் அடங்கிய உயர் மட்டக் குழு கூட்டம் வரும் 14ம் தேதி ஜெத்தாவில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் இ. அகமது, இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் திருமதி மொஹ்சினா கித்வாய், ரியாத்துக்கான இந்திய தூதர் ஹமீத் அலி ராவ், இந்திய ஹஜ் கமிட்டியின் துணை தலைவர் அபூபக்கர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
இதில் சவூதி சார்பில் ஹஜ் அமைச்சர் டாக்டர் பந்தார் பின் முகமது பின் ஹம்ஸா அசாத் அல் ஹஜ்ஜார் தலைமையிலான அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1,70,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஷீர் பகுதியில் (மினா-அரபாத்) ஹஜ் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை அளிக்குமாறு இந்தியா கோரிக்கை விடுக்கவிருக்கிறது.
இந்திய குழு ஹஜ் பொறுப்பில் உள்ள சவூதி அதிகாரிகளையும் சந்தித்து பேசவிருக்கின்றது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications