மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார் மாயாவதி

உத்தரப்பிரதேச சட்டமேலவையின் உறுப்பினராக உள்ள மாயாவதி ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினராக முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக தமது கட்சியினருடன் ஆலோசனை நடத்த்ய பின்னர் அவர் இன்று மனுத்தாக்கல் செய்தார்.
முடிவு ஏன்?
மாநிலங்களவை உறுப்பினராவது ஏன் என்பது தொடர்பாக மாயாவதி அளித்த விளக்கம்:
உத்தரப்பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி வெற்றி பெற்றவுடனேயே பகுஜன்சமாஜ் கட்சித் தொண்டர்கள் மீது கடும் தாக்குதல்களை நடத்தத் தொடங்கிவிட்டது.
இத்தகைய விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்காக என்னை மாநிலங்களவைக்கு அனுப்ப கட்சி முடிவு செய்துள்ளது. இது மட்டுமின்றி நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டாம்.. நாடு முழுவதும் கட்சியின் க்ட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று தொண்டர்கள் கருதுகின்றனர்.
இதனால் பகுஜன் சமாஜ்கட்சியை நாடு முழுவதும் வலுப்படுத்தும் வகையில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications