இடைத்தேர்தல்: நாளை சங்கரன்கோவிலில் ஜெயலலிதா சூறாவளி பிரசாரம்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தொகுதியில் திரும்பும் திசையெல்லாம் கரை வேட்டி, துண்டு போட்ட ஆட்களைத் தான் பார்க்க முடிகின்றது. இந்நிலையில் இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்துசெல்வியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நாளை சங்கரன்கோவில் சூறாவளிப் பிரச்சாரம் செய்கிறார்.
இதற்காக தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பிற்பகல் 2 மணிக்கு வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் சங்கரன்கோவிலுக்கு செல்கிறார். தேவர்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்கும் அவர் பிற்பகல் 2.30 மணிக்கு திருவேங்கடத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்குவார் என்று கூறப்படுகின்றது.
திருவேங்கடம், குருவிகுளம், நாலுவாசன்கோட்டை, மலையான்குளம் விலக்கு, சங்கரன்கோவில் கோமதி அம்மன் சந்நிதி தெரு சந்திப்பு, சண்முகநல்லூர் விலக்கு, குருக்கள்பட்டி, பனவடலிசத்திரம் பஸ் நிறுத்தம், வன்னிக்கோனேந்தல், தேவர்குளம் பிரதான சாலை ஆகிய 10 இடங்களில் அவர் வாக்கு சேகரிக்கிறார். அதன் பிறகு அவர் ஹெலிகாப்டரில் தூத்துக்குடி சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி சங்கரன்கோவில் தொகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் வரும் வழி மற்றும் பிரச்சாரம் செய்யும் இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications