ஜெயலலிதா முதல்வரானால் கோட்டை, இல்லாவிட்டால் கொடநாடு - மு.க.ஸ்டாலின் பேச்சு

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி உட்பட அனைத்து கட்சியினர் பிரச்சாரத்தில் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமாரை ஆதரித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது,
சங்கரன்கோவிலில் இடைத்தேர்தலுக்காக மட்டுமல்ல, ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எந்த நேரத்திலும் மக்கள் பணியாற்றுபவர் கருணாநிதி. சிலருக்கு தேர்தல் வந்தால் தான் மக்கள் ஞாபகமே வருகின்றது. இதனால் தேர்தல் நேரத்தில் மட்டுமே அவர்கள் மக்களை சந்திக்க வருகின்றனர்.
தமிழகத்தில் 5 முறை முதல்வராக பொறுப்பேற்றுள்ள கருணாநிதியின் மூலம் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவர் 50 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை அந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிவிடுவார்.
ஆனால் அதிமுக அரசு பதவியேற்று 9 மாதம் கடந்துவிட்டது. ஆட்சிக்கு வரும் முன் அதிமுக, மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. பஸ் கட்டணத்தை குறைப்போம், மின் தட்டுப்பாடு இருக்காது என்று உறுதி அளித்தனர். ஆனால் தற்போது மின் தடையால் தமிழகமே இருண்டு கிடக்கின்றது.
அண்ணா கூறுவது போல தாழ்ந்த தமிழகமே என்று கூறாமல், இருண்ட தமிழகமே என்று கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆட்சிக்கு வந்ததும் பஸ் கட்டணம், பால் விலையை உயர்த்தினர். விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே போகின்றது.
ஜெயலிலதா ஆட்சிக்கு வந்தால் தான் கோட்டைக்கு வருவார். இல்லையெனில் கொடநாடு சென்றுவிடுவார். இக்கொள்கையை அவர் உறுதியாக பின்பற்றி வருகின்றார்.
இத்தேர்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியாது. ஆனால் சர்வாதிகார ஆட்சி செய்யும் ஜெயலலிதா, தனது தவறை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்க முடியும். எனவே ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட, இத்தேர்தலை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
சங்கரன்கோவில் தொகுதிக்கு திமுக ஆட்சியில் பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 88 கிராமங்களுக்கு கடந்த 1989ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் சங்கரன்கோவில் மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டது.
கடந்த திமுக ஆட்சியின் போது சங்கரன்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு நலத்திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், போக்குவரத்து கழக பணிமனை, கைத்தறியாளர்கள் சங்கம், ரூ.16.71 கோடியில் புறவழிச் சாலை திட்டம், ஆர்.டி.ஓ அலுவலகம், உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன.
திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதால், தற்போது உரிமையுடன் உங்களிடம் ஓட்டு கேட்டு வந்துள்ளோம் என்றார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications