தாக்கலானது ரயில்வே பட்ஜெட்!

நாட்டின் முதல் புல்லட் ரயில் குறித்த அறிவிப்பு, உயர் வகுப்பு பயணிகள் கட்டண உயர்வு, பாதுகாப்பு வரி உள்ளிட்ட பல புதிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இருப்பினும் 2ம் வகுப்பு சாதாரண பயணிகள் கட்டணம் உயராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு வரி
இன்றைய பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பாக பாதுகாப்பு வரி என்ற புதிய வரிதான் இருக்கும் என்று தெரிகிறது. அதாவது கட்டணத்தை உயர்த்தாமல், பயணிகளிடமிருந்து பாதுகாப்பு வரி என்ற பெயரில் பெருமளவிலான பணத்தை வசூலிக்கும் மறைமுக திட்டமாகும் இது. இதன் மூலம் நஷ்டத்தைக் குறைப்பது போலவும் ஆகும், அதேசமயம், கட்டணத்தை உயர்த்தியது போலும் ஆகும்.
இந்த பாதுகாப்பு வரி மூலம் ஆண்டுக்கு ரூ. 5000 கோடி வரை வசூலிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஏசி வகுப்பு மற்றும் முதல் வகுப்புப் பயணிகளுக்கு மட்டும் இந்த பாதுகாப்பு வரி வசூலிக்கப்படலாம் என்று தெரிகிறது.
புது ரயில் இருக்காது
இந்த ஆண்டு புதிய ரயில்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பதில் இருக்கிற ரயில்களில் தரத்தை உயர்த்துவது, அடிப்படைக் கட்டமைப்பை மேம்பபடுத்துவது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் தரும் திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.
திரினமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் திணேஷ் திரிவேதி. மமதா ரயில்வே அமைச்சராக இருந்தபோது தனது மாநிலத்திற்குத்தான் கூடுதல் கவனம் செலுத்தினார். அதேபோல தற்போதும் மமதாவின் முத்திரையே திணேஷின் பட்ஜெட்டிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் புல்லட் ரயில்
நாட்டின் முதலாவது புல்லட் ரயில் குறித்த அறிவிப்பு இன்றைய ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெறும் என்று தெரிகிறது. மும்பைக்கும்-அகமதாபாத்துக்கும் இடையே இந்த புல்லட் ரயில் இயக்கப்படும்.
மும்பை- அகமதாபாத் இடையே மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் முதலில் இந்த புல்லட் ரயில் இயக்கபடும். மிக அதிகபட்சமாக ஒரு மணிநேரத்துக்கு 350 கிலோ மீட்டர் வேகத்துக்கு இந்த ரயில் இயக்கப்படும். ரூ 60 ஆயிரம் கோடி மதிப்பிலான இத்திட்டத்தை பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் 10 ஆண்டுகளில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
அகமதாபாத்- மும்பை இடையேயான தற்போதைய தூரந்தோ ரயிலில் 7 மணி நேர பயணம் எனில் புல்லட் ரயிலில் 4 மணிநேரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதாரண மனிதர்களுக்கான சிறந்த பட்ஜெட்-தினேஷ் திரிவேதி:
முன்னதாக இந் நிலையில் ரயில்வே பட்ஜெட் நிச்சயமாக நல்ல பட்ஜெட்டாக இருக்கும் என்றும் சாதாரண எளிய குடிமகனுக்கு சிறந்த பட்ஜெட்டாக இருக்கும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியுள்ளார்.
இந்திய ரயில்வேயை தங்கம் போல ஜொலிக்க வைக்கும் வகையில் இந்த ரயில்வே பட்ஜெட் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications