நல்ல வெயில்... ஆங்காங்கு ஜில்லுன்னு மழை: இன்றும் பெய்யுமாம்!

தமிழகத்தில் தற்போது கோடைகாலத்தின் தொடக்கமாகும். இதனால் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வெயில் அடித்து வருகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக கடலோரப் பகுதிகளில் வெப்ப நிலை குறைந்து வந்தது. நாகை, காரைக்கால், திருவாரூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் நேற்றும், நேற்று முன்தினமும் லேசான மழை பெய்தது.
இதேபோல தூத்துக்குடி மாவட்டம் பரங்கிபேட்டை, சாத்தான்குளம் பகுதிகளில் 3 சென்டி மீட்டரும், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் 1 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கோடைமழை பெய்துள்ளது.
இன்றும் மழை தொடரலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏன் மழை
இந்த மழைக்கு வெப்பச் சலனம்தான் காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகம் முழுவதும் இந்த மாதம் முதல் கோடைக்காலம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கிறது. நிலப்பரப்புகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
அதே நேரத்தில் வங்காள விரிகுடாவில் கிழக்கில் இருந்து நிலப்பரப்பை நோக்கி வீசும் வேகமான காற்று மிகுந்த ஈரப்பதத்துடன் உள்ளது. இதனால் நிலப்பகுதியை வந்தடையும் ஈரப்பதம் மிகுந்த காற்று மற்றும் இங்கு உள்ள வெப்பம் காரணமாக வெப்பசலனம் ஏற்படுகிறது. இது கோடைகாலம் தொடங்குவதற்கான அறிகுறியாகும்.
இதன் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
புதன்கிழமையும் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. அந்த மழை பெய்ததே தெரியாத அளவுக்கு மறு நாள் முதல் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications