முன்விரோதம்: தூத்துக்குடியில் வீட்டுக்கு முன் நின்ற மூத்த வழக்கறிஞர் காருக்கு தீவைப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆதித்தனின் வீட்டுக்கு முன்பு நின்று கொண்டிருந்த அவரது கார் மீது பெட்ரோல் ஊற்றி 2 இளைஞர்கள் தீ வைத்தனர்.
தூத்துக்குடி மாசிலாமணிபுரம் 3ம் தெருவில் வசித்து வருபவர் மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணிய ஆதித்தன்(68). அவர் வழக்கறிஞர் சங்க முன்னாள் செயலாளராகவும், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.
நேற்றிரவு 8 மணியளவில் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் ஆதித்தன் வீட்டு கேட்டைத் திறந்து அங்கு நின்று கொண்டிருந்த கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதைப் பார்த்த வழக்கறிஞரின் மனைவி புஷ்பா சத்தம்போட்டவுடன் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். உடனே கணவனும், மனைவியுமாகச் சேர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் இன்ஸ்பெக்டர் குருநாதன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சொத்து தொடர்பாக உள்ள முன்விரோதத்தினால் புஷ்பாவின் தங்கை கணவர் ஆறுமுகநேரியைச் சேர்ந்த பாண்டியனின் தூண்டுதலில் தான் காருக்கு தீ வைக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications