தேர்தல் விதிமுறைகளை விளக்கிய போலீசாருடன் அமைச்சர் செந்தூர் பாண்டியன் கடும் வாக்குவாதம்

அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று சங்கரன்கோவில் தொகுதியில் 10 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். இதையொட்டி அவரது பிரச்சார வாகனம் நிற்பதற்காக தேவர்குளம், வன்னிகோனேந்தல், பனவடலிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் விதி்முறையை மீறி அதிமுகவினர் சாலையை மறித்து பிரச்சார பந்தல் போட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று தேவர்குளத்திற்கு வந்த தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் விதிமுறையை மீறி சாலையில் அமைக்கப்பட்டிருந்த பிரச்சார பந்தலை உடனே அகற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் சாலையை மறித்து எந்தவித பந்தலும் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து எஸ்.பி. விஜயேந்திர பிதாரி உத்தரவின்பேரில் போலீஸ் அதிகாரிகள் தேவர்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரச்சார பந்தலை அகற்ற முயன்றனர். அப்போது அங்கு வந்த அதிமுகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த அமைச்சர் செந்தூர் பாண்டியனும் அங்கிருந்த போலீ்ஸ்காரர்களை எச்சரித்தார். தாழையூத்து டி.எஸ்.பி. கனகராஜ், மானூர் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் ஆகியோர் அமைச்சரிடம் தேர்தல் பார்வையாளர்களின் உத்தரவை தெரிவித்தனர். ஆனால் அமைச்சர் அவர்களுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அகற்றப்பட்ட கட்சி கொடிகளை போலீசாரே கட்டிவிட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications