இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை ஆதரிக்காத பிரணாப் முகர்ஜியின் பேச்சுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்
சென்னை: இலங்கைக்கு எதிரான ஐ.நா.மனித உரிமைக் குழுவின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல், அதற்கு விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பேச்சுக்கு, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஐ.நா. மனித உரிமைக் குழுவில் எந்தத் தனி நாட்டுக்கு எதிராகவும் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கும், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், ராஜபக்ஷேவிற்கு துணை நின்றது இந்திய அரசு தான். எனவே தான் தனது கூட்டாளிக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்க இந்தியா மறுக்கின்றது. இதற்கு பிரணாப் முகர்ஜி கூறியுள்ள காரணம் ஏற்கத்தக்கது அல்ல.
தனி ஒரு நாட்டின் நிறவெறிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்னாள் பிரதமர் நேரு தயங்கவில்லை. ஆனால் அவர் வழியில் வந்ததாக கூறும் மன்மோகன் சிங் அரசு பொருந்தாத காரணம் கூறி மழுப்புகின்றது. அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மேற்கிந்திய நாடுகள் இலங்கைக்கு எதிரானத் தீர்மானத்தை ஆதரிக்கும் போது, இந்தியா பின்வாங்குவது அப்பட்டமான மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கை ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications