இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா ஆதரிக்காவிடில் தமிழகத்தில் காங்கிரஸ் துடைத்து எறியப்படும்-வைகோ

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி துடைத்து எறியப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் எப்.எம். ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

பஞ்சசீலம் பேசிய இந்தியா, உலக அமைதிக்கு குரல் கொடுத்த இந்தியா, மனித உரிமை மீறல்களை கண்டித்த இந்தியா, தற்போது லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டதை உலக நாடுகள் கண்டிக்கையில் கண்டுகொள்ளாமல் உள்ளது.

ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் ஒன்றும் இலங்கையை கண்டிக்கும் தீர்மானம் அல்ல. கண்துடைப்புக்காக இலங்கை அரசே நியமித்த குழுவின் அறிக்கையின் அடிப்படையிலாவது போர்க்காலத்தில் தமிழர்களுக்கு சிங்கள அரசு இழைத்த அநீதியையும், மனித உரிமை மீறல்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று தான் அந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

இதற்கு கூட சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இலங்கை அரசு நடத்திய போருக்கு பணமும், ஆயுதமும் கொடுத்து உதவிய இந்தியாவுக்கோ திருடனுக்கு தேள் கொட்டிய நிலை. அமெரிக்காவின் தீர்மானத்தை விட இந்தியாவே ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அது கொண்டு வராது. காரணம் இந்தியா இனக்கொலையின் பங்காளி.

இந்த விவகாரத்தில் இந்தியா எடுக்கும் முடிவு இந்திய ஒருமைப்பாட்டை தீர்மானிக்கும். இந்த விஷயத்திலும் இந்தியா துரோகம் செய்தால் வருங்கால தமிழ் சந்ததியினர் இந்திய ஒருமைப்பாட்டை உடைக்கும் நிலை உருவாகும்.

தமிழினத்திற்கு துரோகம் செய்த குற்றத்தில் காங்கிரஸு்ககும் அதன் கூட்டணி கட்சியான திமுகவுக்கும் முக்கிய பங்கு உள்ளது. காங்கிரஸின் இந்த முடிவு தமிழகத்தில் இருந்து அந்த கட்சியையே துடைத்து எறிந்துவிடும் என்று எச்சரிக்கிறேன்.

பிராணாப் முகர்ஜி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது இலங்கை அதிபர் ராஜபக்சே எழுதிக் கொடுத்த அறிக்கையை வாசித்தவர். இது குறித்து நான் ஏற்கனவே குற்றமாசாட்யுள்ளேன். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் தமிழக எம்.பி.க்கள் தங்கள் தலைவர்களின் ஆதரவோடு நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்ய வேண்டும்.

தென்தமிழகத்தை அழிக்க வரும் எமன் தான் கூடங்குளம் அணுமின் நிலையம். இதைத் தான் நான் ஆரம்பத்தில் இருந்தே கூறிக் கொண்டிருக்கிறேன். பல்வேறு வகைகளில் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் காங்கிரஸ் கிறிஸ்தவ மிஷினரிகளையும், போராட்டக்குழு தலைவர் உதயகுமாரையும் கொச்சைப்படுத்தி வருகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+