மதுரையி்ல் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி குளிர்பானம் தயாரித்து விற்ற நபர் கைது !
மதுரை: மதுரையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி குளிர்பானம் தயாரித்து விற்ற நபரை போலீசார் கைது செய்தனர். குளிர்பானம் தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள், பாட்டிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி குளிர்பானம் விற்கப்படுவதாக, குளிர்பான நிறுவன அதிகாரி ஒருவர் மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு துணை கமிஷனர் திருநாவுக்கரசுக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து துணை கமிஷனர் திருநாவுக்கரசு, உதவி கமிஷனர் துரைசாமி, இன்ஸ்பெக்டர் கதிர்வேல் ஆகியோர் முனிச்சாலை, பூசாரித் தோப்பு லட்சுமிபுரம் 6வது தெருவில் வசித்த நாராயணன்(40) என்பவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கடந்த 2 ஆண்டுகளாக போலி குளிர்பானங்கள் தயாரித்து விற்கப்பட்டது தெரிய வந்தது.
நாராயணனின் தந்தை கண்ணன் தனது வீட்டில் சோடா தயாரித்து விற்று வந்தார். தந்தை இறந்த பிறகு நாராயணன் அத்தொழிலில் ஈடுபட்டார். ஆனால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதனையடுத்து பிரபல குளிர்பான நிறுவனங்களின் பெயரில் போலி குளிர்பானம் தயாரித்து விற்க முடிவு செய்தார்.
இதற்காக பிரபல குளிர்பான நிறுவனங்களின் சப்-டீலர்களில் ஒருவர் உதவியுடன் காலி பாட்டில்களை சேகரித்து, அதில் போலி குளிர்பானங்களை நிரப்பினார். அதன்பிறகு நிறுவன மூடிக்கு பதிலாக, 'ஸ்பெஷல் டிரிங்ஸ்' என்று அச்சிடப்பட்ட மூடியை பயன்படுத்தி விற்பனைக்கு அனுப்பியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து நாராயணனை கைது செய்த போலீசார், குளிர்பானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கருவிகள், பாட்டிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக இன்னொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications