ஏர் இந்தியாவுக்கு நஷ்ட ஈடெல்லாம் கொடுக்க முடியாது: போயிங்
நியூயார்க்: ஏர் இந்தியா நிறுவனம் ஆர்டர் கொடுத்த போயிங் நிறுவனத்தின் ட்ரீம்லைனர் விமானங்கள் உரிய நேரத்தில் விநியோகிக்கப்படாததால் 500 மில்லியன் டாலர் நட்ட ஈடு கோருவோம் என்ற மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சககத்தின் கோரிக்கையை போயிங் நிறுவனம் நிராகரித்துள்ளது.
ஐதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்து அமைச்சக செயலாளர் பிரசாந்த் சுகுல் கூறியிருந்ததாவது:
கடந்த 2005-ம் ஆண்டு போயிங் நிறுவனத்திடம் 27 டீர்ம்லைனர் விமானங்களுக்காக ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடியான காலத்தில் அந்நிறுவனம் விமானங்களை விநியோகிக்கவில்லை. போயிங் நிறுவனம் தொடர்ந்து தாமதம் செய்து வருவதால் 500 மில்லியன் டாலர் நட்ட ஈடு கோர உள்ளோம். 2008-ம் ஆண்டே விமானங்களை போயிங் நிறுவனம் கொடுத்திருக்க வேண்டும் என்றார்.
ஆனால் போயிங் நிறுவனம் இதனை நிராகரித்திருக்கிறது. 500 மில்லியன் டாலர் நட்ட ஈட்டை இந்திய நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டியதில்லை என்று அதன் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நட்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அமெரிக்காவின் வங்கிதான் போயிங் ட்ரீம்லைனர் விமானங்களை வாங்க கடன் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications