புது ஸ்டைலில் 300 குடங்கள் வழங்கிய திமுகவினர்: தேடிப்பிடித்து பறித்துச் சென்ற போலீசார்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 300 சில்வர் குடங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதிரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் சங்கரன்கோவிலில் தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.
கவிதாலயா தியேட்டர் அருகில் பிரச்சாரம் செய்ய வந்த ஸ்டாலினை வரவேற்க பூ நிரப்பிய 300 சில்வர் குடங்களை ஏந்தியவாறு பெண்கள் நிறுத்திவைக்கப்பட்டனர். பிரச்சாரம் முடிந்தவுடன் அந்த குடங்கள் அதை வைத்திருந்த பெண்களுக்கே அன்பளிப்பாக கொடுக்கப்பட்டன.
இது குறித்து பல்வேறு கட்சிகள் போலீசில் புகார் செய்தனர். அவர்களின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் புகார் உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட குடங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications