கருணாநிதியைக் கண்டித்து கூடங்குளத்தில் கடையடைப்பு போராட்டம்
நெல்லை: அணுமின் நிலையத்திற்கு ஆதரவாகப் பேசிய திமுக தலைவர் கருணாநிதி இன்று சங்கரன்கோவிலுக்கு வந்துள்ளார். அவர் வருகையைக் கண்டித்து இன்று கூடங்குளத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று சங்கரன்கோவில் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். இன்று இரவு 7 மணிக்கு வடக்கு ரதவீதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக அவர் நெல்லை வந்துள்ளார். இதற்கிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆதரவு தெரிவித்த கருணாநிதியைக் கண்டித்து கூடங்குளத்தில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
அங்குள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் கடைத்தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் அவரைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்று அணுஉலை எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் போராடி வருகையில் அதனை உடனே திறக்க வேண்டும் என்று கருணாநிதி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications