சங்கரன்கோவிலில் கருணாநிதி பேச நாங்கள் பட்டப்பாடு இருக்கே...: கருப்பசாமி பாண்டியன்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் திமுக தலைவர் கருணாநிதி பேசுவதற்காக நாங்கள் பட்டப்பாடு கொஞ்ச, நஞ்சமல்ல என்று அக்கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி சங்கரன்கோவிலில் நேற்று பிரச்சாரம் செய்தார். நேற்றிரவு சங்கரன்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
அந்த கூட்டத்தி்ல் கலந்து கொண்ட நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் பேசியதாவது,
அண்ணல் காந்தியடிகள் ஆண்டுக் கணக்கில் போராடி நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார். இன்று இந்த மைதானத்தில் உங்களை சந்திப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த மேடையை காப்பாற்ற மத்திய அமைச்சர் முக அழகிரி தலைமையில் 2 நாட்கள் போராடியிருக்கிறோம். இது சங்கரன்கோவில் மக்களுக்கே தெரியும்.
ஏதோ 40 நாள், 60 நாள் அமைச்சர்கள் கூறியதற்காக இந்த மேடையை அமைக்கவிடாமல் 2 நாட்களாக தடுத்தார்கள். இங்குள்ள அதிகாரிகள் கொடுத்த அனுமதியை ரத்து செய்வதாக உத்தரவு போடுகின்றனர். அந்த உத்தரவு போடுகின்ற அலுவலகத்தைக் கட்டிக் கொடுத்தவரே கருணாநிதி தான். நெல்லையில் இருந்து ஒரு தேர்தல் அதிகாரி ஆணை பிறப்பிக்கிறார். அந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை கட்டிக் கொடுத்ததும் கருணாநிதி தான்.
கடந்த 75 ஆண்டுகளாக தமிழினத்திற்காக பாடுபடும் நம் தலைவர் கருணாநிதி சங்கரன்கோவிலிலே பேசுவதற்கு இந்த மைதானத்தை பெற நாங்கள் பட்டப் பாடு இருக்கிறதே. அதற்கு வரும் 18ம் தேதி தீர்ப்பு கூறுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications