ஆறுகளே இல்லாமல்போகும் அளவுக்கு மணல் கொள்ளை நடக்கிறது: பொன் ராதாகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: கூடங்குளம் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா மவுனம் சாதிப்பது ஏன் என்று பாஜக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சங்கரன்கோவிலில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறது. இங்குள்ள வீதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் வலம் வருவது மக்களை அச்சப்பட வைத்துள்ளது. இனி வரும் காலத்திலாவது குறிப்பிட்ட அளவு தொண்டர்களையே தொகுதியில் தேர்தல் பணி செய்ய அனுமதிக்க வேண்டும். வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு அடையாள அட்டைகள் கொடுத்து தேர்தல் பணிகளை வரையறுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். தேர்தல் நியாயமாக நடந்தால் பாஜக நிச்சயம் வெற்றி பெறும்.

திராவிடக் கட்சிகள் தான் மின்வெட்டுக்கு காரணம். கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி முதல்வர் ஜெயலலிதா மவுனம் காப்பது ஏன். ஆறுகளே இல்லாமல் போகும் அளவுக்கு மணல் கொள்ளை நடந்து வருகிறது. விவசாயம், நெசவுத் தொழில் ஆகியவை அழிந்து வருகின்றன. ரியல் எஸ்டேட் தொழிலில் அரசியல்வாதிகள் கோலோச்சுகின்றனர்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். அவ்வாறு இந்தியா ஆதரிக்காவிட்டால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெறும் என்று அக்கட்சி தலைவர் கருணாநிதி அறிவிப்பாரா என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+