ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உட்பட தொலைத்தொடர்புத் துறையில் ரூ58 ஆயிரம் கோடி திரட்ட முடிவு; பிரணாப்

Subscribe to Oneindia Tamil

Pranab Mukherjee
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமங்களை ஏலம் விடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் தொலைத்தொடர்புத் துறையானது ரூ58 ஆயிரம் கோடியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டிலும், உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்ட உரிமங்களை ஏலம் மூலம் விற்பனை செய்வதன் மூலம் ரூ40 ஆயிரம் கோடி திரட்ட முடியும் என்று தெரிவித்திருந்தார்.

இதேபோல் தொலைத் தொடர்புத் துறையின் பிற சேவைகள் மூலம் ரூ16 ஆயிரம் கோடியும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான 2 விழுக்காடு கூடுதல் சேவை வரிவிதிப்பின் மூலம் தொலைத்தொடர்புத்துறைக்கு கூடுதலாக ரூ2500கோடியும் கிடைக்கும். தொலைத்தொடர்புத் துறையில் மொத்தம் ரூ58 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொலைத்தொடர்புத் துறை நிறுவனங்கள் தற்போதைய கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்கிறார் ஐடியா செல்லுலார் நிறுவன நிர்வாக இயக்குநர் ஹிமன்சு கபானியா.

கடந்த ஆண்டு 3 ஜி மற்றும் பிராண்ட்பேண்ட் ஒயர்லெஸ் சேவைக்கான ஏலம் விடப்பட்டதன் மூலம் தொலைத் தொடர்புத்துறை ரூ1 லட்சம் கோடி வருவாய் ஈட்டியது.

ஆ. ராசா அமைச்சராக இருந்த காலத்தில் முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட 122 உரிமங்களை ரத்து செய்திருந்த உச்சநீதிமன்றம் 4 மாதங்களுக்குள் உரிமங்களை ஏலம் விட உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+