மனித உரிமைகள் தொடர்பாக வெளிநாட்டின் ஆலோசனைகள் தேவையில்லை: மகிந்த ராஜபக்ச

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு ஆலோசனைகளை நாடவோ வெளிநாட்டு படையினரை ஈடுபடுத்தவோ இல்லை. எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு வெளிநாட்டு ஆலோசனைகள் அவசியம் இல்லை.
இதனால் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் வெளிநாட்டு தலையீடுகளோ அல்லது அவர்களின் அறிவுறுத்தல்களோ எங்களுக்கு அவசியமில்லை.
சொந்த புத்தியால்தான் ஜெயிச்சோம்
எமது படையினரால் உள்நாட்டில் வகுக்கப்பட்ட இராணுவ வியூகங்களின்படியே இந்த யுத்தத்தில் வென்றுள்ளோம். அவர்கள் எமது தளபதிகளால் நெறிப்படுத்தப்பட்டனர். தமது சொந்த கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களால் நாட்டை முன்னேற்றுவதற்கான ஆற்றலையும் வலிமையையும் அறிவையும் இலங்கை கொண்டுள்ளது.
இந்நாட்டை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எமது பிரச்சினைகளை எப்படி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு எதுவுமில்லை.
ஜெனீவாவுக்கு எதிராக போராடுங்கள்
அனைத்து இலங்கையர்களும் அவர்கள் வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு எந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஜெனீவாவில் உருவாகியுள்ள சூழ்நிலைக்கு எதிராக எழ வேண்டும். நாட்டை பாதுகாப்பதற்கு மக்களுடன் கிளர்ந்தெழ வேண்டியது எதிர்கட்சிகளின் கடமையாகும். எதிர்கட்சிகளும் அனைத்து இலங்கையர்களும் அவர்களின் இனம், சாதி, மதம், அரசியல் என்பவற்றை மறந்துவிட்டு
இத்தருணத்தில் இணைந்து ஒரே மக்களாக இப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications