புதுச்சேரி அருகே மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் சிக்கினர்
புதுச்சேரி: இந்திய எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் இந்திய கடலோர காவல்படையால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியின் தென்கிழக்குப் பகுதியில் 40 கடல் மைல் தூரத்தில் இந்திய கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்து சென்ற கடலோரக் காவல் படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 300 கிலோ எடையுள்ள மீன்களை அவர்கள் பிடித்திருந்ததாகக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட படகுடன், பிடிபட்ட இலங்கை மீனவர்கள் 5 பேரும் புதுச்சேரி மீன்பிடி துறைமுகம் அருகே கொண்டு வரப்பட்டனர். துறைமுகத்துக்குள் அழைத்து வர முடியாதபடி, முகத்துவாரம் பகுதியில் நீர்மட்டம் ஒரு மீட்டருக்குள் குறைந்திருந்தது.
பிடிபட்ட மீனவர்களிடம் கடலோரக் காவல் படை, வருவாய்த்துறை, மீன்வளத்துறை, காவல்துறை உள்ளிட்ட 5 துறை அதிகாரிகள் முதல்கட்ட விசாரணை நடத்திய பிறகே, 5 மீனவர்களும் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட இருக்கின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications