மில் அதிபர் வீட்டு காவலாளியை கழுத்து அறுத்து கொன்று 2 பேருக்கு வலை
கோவை: கோவை மில் அதிபர் வீட்டு காலவாளியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தப்பி சென்ற 2 கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் மில் நடத்தி வருபவர் நடராஜ். மில் அருகில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். வீட்டிற்கு பாதுகாவளராக நேபாளை சேர்ந்த ஹேம்ராஜ்(28) என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் நடராஜின் வீட்டு சுவரை 2 கொள்ளையர்கள் ஏறி குதித்தனர். அதனை கண்ட காவலாளி ஹேம்ராஜ், கொள்ளையர்களுடன் போராடி உள்ளார். அப்போது கொள்ளையர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மூலம் ஹேம்ராஜை தாக்கி உள்ளனர்.
இதில் வலி தாங்க முடியாத ஹேம்ராஜ் சத்தம் போட்டார். இதில் நடராஜின் வீட்டு வேலைக்காரி கொண்டம்மாள் எழுந்து வீட்டு ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது கொள்ளையர்கள், ஹேம்ராஜின் கழுத்தை அறுப்பதை கண்டார். சத்தமிட்டால் தன்னையும் கொள்ளையர்கள் கொலை செய்வார் என்று பயந்த கொண்டம்மாள் அனுமதியாக இருந்துவிட்டார்.
ஹேம்ராஜின் அலறல் சத்தத்தை கேட்டு பயந்த கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். கொள்ளையர்கள் சென்ற பிறகு கொண்டம்மாள் ஓடி வந்த பார்த்த போது, கழுத்து அறுக்கப்பட்ட ஹேம்ராஜ் இறந்து கிடந்தார்.
இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து, நடராஜூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா, பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி. சக்திவேல் இன்ஸ்பெக்டர்கள் திருமேனி, சிவக்குமார், நேரு, கனக சுந்தரம், சுப்பிரமணியம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
கொலை செய்யப்பட்ட ஹேம்ராஜின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications