வேலூரில் தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரி கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆர்பாட்டம்
வேலூர்: வாரம் ஒரு நாள் விடுமுறையை ரத்து செய்யவும், தடையில்லா மின்சாரம் வழங்கவும் கோரி தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் விடப்படும் ‘வாரம் ஒரு நாள் விடுமுறையை’ தளர்வு செய்து தடையில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் ஜி. லதா பேசியதாவது,
தமிழ்நாட்டில் நிலவி வரும் கடும் மின்வெட்டு காரணமாக கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொழிற்சாலைகளுக்கு விடப்படும் வாரம் ஒரு நாள் விடுமுறை என்பது கறிக்கோழி வளர்ப்பிற்கும் பொருந்தும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் கோழி வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே ஒரு நாள் விடுமுறையை ரத்து செய்து, தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து காப்பீட்டுத் திட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.
இந்த போராட்டத்தில் மாநில துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார், மாநில துணைத் தலைவர் ஆர்.குலசேகரன், மாவட்டச் செயலாளர் எம்.இந்திரன், மாவட்டப் பொருளாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications