ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 14 வீரர்கள் உள்பட 16 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில் தரையிறங்க முயன்ற துருக்கியை சேர்ந்த ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 12 துருக்கி ராணுவ வீரர்களும், 4 ஆப்கான்வாசிகளும் பலியாகினார்.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் துருக்கி நாட்டை சேர்ந்த 1,800க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் காபூலின் புறநகர் பகுதியை சேர்ந்த மக்களுக்கு உதவிகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் காபூலின் புறநகர் பகுதியான பக்ராமி மாவட்டத்தை சேர்ந்த ஹசேன் கயில் பகுதி வழியாக நேற்று துருக்கி ராணுவ வீரர்களை ஏற்றி வந்த ஹெலிகாப்டர் ஒன்று வந்தது. ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்ற போது, குடியிருப்பு பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது.
இதில் ஹெலிகாப்டரின் அப்பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இவ்விபத்தில் 12 துருக்கி ராணுவ வீரர்களும், 2 குழந்தைகள் உட்பட 4 ஆப்கான்வாசிகளும் பலியானதாக தெரிகிறது.
ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர். ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து துருக்கி ராணுவ அதிகாரிகள் கூறுகையில்,
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் அமெரிக்கா தலைமையில் நடத்தப்பட்ட நேட்டோ படைகளில் பயன்படுத்தப்பட்டது. விபத்து நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு பணியில் ராணுவம் ஈடுபடவில்லை. துருக்கி ராணுவ வீரர்களுக்கு, விபத்து நடந்த இடத்தில் உள்ள மக்களுடன் எந்த முன்விரோதமும் இருக்கவில்லை. இவ்விபத்தில் துருக்கி ராணுவத்தை சேர்ந்த 12 வீரர்கள் பலியாகி உள்ளனர் என்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications