விமானம் மற்றும் ஹெலிகாப்டர் சேவையில் ஜாய் லுக்காஸ்

இது தொடர்பாக ஜோயாலுக்காசின் நிர்வாக இயக்குனர் ஜோய் ஆலுக்காஸ் கூறியுள்ளதாவது:.
பிரபல நகை விற்பனை நிறுவனமான ஜோயாலுக்காஸ் புதிய முயற்சியாக ஜோய் ஜெட்ஸ்' நிறுவனத்தை தொடங்கி உள்ளது. இந்த நிறுவனம் ஆடம்பர விமானம் மற்றும் ஹெலிகாப்டர் சேவை வழங்கும்.
சொகுசு விமானங்கள்
முதலாவதாக கொச்சியிலிருந்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு விமான சேவை வழங்கும். இதற்காக பெனோம் 100' என்ற அதிநவீன தொழில் நுட்பத்தில் உருவான 5 இருக்கைகள் அமைந்த விமானங்களை பயன்படுத்த உள்ளது. தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் சீனியர் பிசினஸ் எக்சிகிïட்டிவ்கள் மற்றும் ஆடம்பர சுற்றுலா செல்ல விரும்புகிறவர்களுக்கு இந்த விமானங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். நீண்ட தூரம் பயணம் செய்யும் விமானங்களையும், சர்வதேச விமான சேவைகளையும் 6 மாத காலத்தில் துவக்க இந்த நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 4 விமானங்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டு உள்ளது.
ஹெலிகாப்டர்
ஜோய் ஜெட்ஸ் நிறுவனம் வழங்கும் ஹெலிகாப்டர் சேவை சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் ஏற்றதாக அமையும். கொச்சியின் அற்புதமான காட்சிகளை வான்வெளியில் இருந்து ரசிப்பதற்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்டு உள்ளது. கொச்சியையும் அதன் இயற்கை காட்சிகள் நிறைந்த சுற்றுப்புறங்களையும் ஒரு மணி நேரத்தில் பறந்து சுற்றிப் பார்க்கலாம்.
மேலும் அவசர காலங்களுக்கும், மருத்துவ உதவி தேவைப்படும் காலங்களுக்கும் மற்றும் சிறப்பு தேவைகளுக்கும் இந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஹெலிகாப்டர் 6 இருக்கைகள் கொண்டவை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications