சென்னையில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பெண்கள் கைது
சென்னை: சென்னையில் 70 கிலோ எடையுள்ள ரூ.24 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை, ரயிலில் கடத்த முயன்ற மதுரையை சேர்ந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் நிறுத்தப்படும் பிளாட்பாரம் அருகே எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், மாம்பலம் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் 3 பெண்கள் பைகளுடன் சுற்றி திரிந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரிக்க முயன்ற போது, 3 பேரில் ஒரு பெண் தனது பையை கீழே வைத்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதனையடுத்து மற்ற 2 பெண்களையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் மதுரை மாவட்டம் தள்ளாக்குளத்தை சேர்ந்த செல்வி(40), ராணி(37) ஆகியோர் என்பதும், ஊறுகாய் விற்கும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
அதன்பிறகு 2 பெண்களின் பைகளில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது 2 பைகளிலும் வைக்கப்பட்டிருந்த 70 கிலோ கஞ்சா சிக்கியது. இதன் மதிப்பு ரூ.24 லட்சம் ஆகும். போலீஸ் விசாரணையில் இரு பைகளையும் பல்லாவரம் வரை கொண்டு வந்தால் பணம் தருவதாகவும், தப்பியோடிய பெண் 2 பேரையும் அழைத்து வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து கஞ்சா கடத்த முயன்ற 2 பெண்களையும போலீசார் கைது செய்து, 70 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications