எங்களைப் பார்த்து அதிமுக பயந்துவிட்டதால் சங்கரன்கோவிலில் நாங்க ஜெயிச்சிட்டோம்! - விஜயகாந்த்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேர்தல்களை முறையாகவும், நேர்மையாகவும் நடத்தவே தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு உறுதுணையாக இருக் வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது.ஆனால் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடக்கும் விதத்தை பார்த்தால் தேர்தல் ஆணையமும், ஆளுங்கட்சியின் கைப்பாவை போல் செயல்படும் காவல்துறையும் எந்த வகையிலும் திருந்தவில்லை என்பதையே காட்டுகின்றது.
நான் சங்கரன்கோவில் தொகுதியில் ஆறு நாட்கள் தங்கி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்தனர். இதை தேர்தல் அதிகாரியும், தேர்தல் பார்வையாளர்களும் தடுக்கவில்லை. இது தவிர முழுக்க, முழுக்க அவர்கள் ஆளுங்கட்சிக்கு துணை போகின்றனர் என நான் நினைக்கிறேன்.
32 அமைச்சர்கள் தொகுதியில் தேர்தல் பணியாற்றியது, முதல்வர் ஜெயலலிதா 10 இடங்களில் பிரச்சாரம் செய்தது, அளவின்றி பணத்தை வாரி இறைத்தது, அதிகார துஷ்பிரயோகத்தை வரம்பு மீறி செய்தது ஆகியவை எங்களால் ஏற்பட்ட பயத்தால் நடந்ததாகும். எனவே, இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை நாங்கள் வெற்றி பெற்றதாகக் கருதுகிறோம்," என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications