பிட் அடித்ததால் வெளியேற்றப்பட்ட பிளஸ் 2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை
கிருஷ்ணகிரி: பிளஸ் டூ தேர்வின்போது பிட் அடித்ததால் வெளியேற்றப்பட்ட மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை நாகரசம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் திருப்பதி. கூலித் தொழிலாளி. அவரது மகன் பிரதீப் (17). அவர் சிங்காரப்பேட்டையில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது. கடந்த 16ம் தேதி இயற்பியல் தேர்வு நடந்தது. சிங்காரப்பேட்டையில் உள்ள தேர்வு மையத்திற்கு திடீர் என்று பறக்கும் படையினர் வந்தனர். அவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவ-மாணவியரை சோதனை செய்தனர். அப்போது பிரதீப் பிட் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தன்னை மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்குமாறு அவர் கெஞ்சினார். ஆனால் விதிமுறைகளை மீறிய அவரை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று பறக்கும் படையினர் உறுதியாகத் தெரிவி்ததுவிட்டனர்.
இதனால் அவமானம் அடைந்த அவர் நேராக வீட்டிற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் பிரதீப்பின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications