ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் திட்டங்கள் இல்லை - கி.வீரமணி
சென்னை: ரயில்வே பயணிகளின் வசதியை அதிகரித்து, அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் திட்டம் எதுவும் ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ரயில்வே பட்ஜெட்டில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள அளவுக்கு, பயணிகளுக்கான வசதிகள் பெருக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிர்ச்சிக்குரியதாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வு உள்பட பல்வேறு சங்கடங்களை பயணிகளுக்கு தரும் வகையில் ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது.
பயணிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வசதிகள் அதிகரிப்பு திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. புதிய ரயில் பாதைகள் குறித்தும், தமிழகத்திற்கு இரட்டைப் பாதைகளுக்கான அறிவிப்புகள் இல்லாததும் வருந்தத்தக்கது.
தென் இந்தியாவில் டிக்கெட் இல்லா பயணம் குறைவு. வடக்கே செல்லும் ரயில்களில் டிக்கெட் எடுப்பவர்கள் மிகவும் குறைவு என்பது அனுபவ உண்மை. ஆனால் அவர்களுக்கு வசதிப் பெருக்கம். ஆனால் முறையாக டிக்கெட் எடுத்து செல்வோருக்கு வசதி சுருக்கம். இதுபோன்ற ஓட்டைகளை அடைத்து டிக்கெட் இல்லாத திருட்டுப் பயணத்தை தடுத்து நிறுத்தினால், ரயில்வே துறையின் வருவாய் பெருக வாய்ப்பு ஏற்படும்.
ராயபுரம் முனையம் வரவேற்கக்கூடியது. தமிழகத்திற்கு மேலும் பல புதிய திட்டங்கள் தேவை. இது குறித்து தமிழக எம்.பி.க்கள் வற்புறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications