22 வாக்குச்சாவடிகளில் 7 மணி வரை நடந்த வாக்குப்பதிவு: மக்கள் பேரார்வத்துடன் வாக்களித்தனர்

சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் நேற்று பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்கியது. அங்கு மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 87 வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக தொகுதியில் 242 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். பூத் எண் 4,12, 14, 15, 17, 30, 32, 34, 35, 37, 38, 49, 50, 53, 54, 94, 115, 129, 149, 178, 190, 207 ஆகிய 22 வாக்குச்சாவடிகளில் 1320 வாக்காளர்கள் மாலை 5 மணிக்கு பின்னரும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் இந்த வாக்குச்சாவடிகளில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.
தேர்தல் நடத்தும் அலுவலர் பரமசிவன் கூறுகையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதனால் 78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்றார்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நேற்று காலை திருமணம் செய்து கொண்ட மாடசாமி, சங்கரகோமதி தம்பதியினர் திருமண மண்டபத்தில் இருந்து மாலையும், கழுத்துமாக வாக்களிக்க வந்தனர். இதே போன்று நேற்று காலை திருமணம் செய்து கொண்ட இன்னொரு மணமகன் போத்திலிங்கம் என்பவரும் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். இதனால் சங்கரன்கோவில் வாக்குச்சாவடிகளில் புதுமாப்பிள்ளைகள் மயமாக இருந்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications