நாமக்கல் அருகே வெளிமாநிலத்திற்கு கடத்த முன்ற 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சின்னகவுண்டன் பாளையத்தில் வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேசன் அரியை அதிகாரிகள் கைப்பற்றினர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுக்கா , பள்ளிபாளையம் அருகே உள்ளது சின்னகவுண்டன் பாளையம். இங்கு தமிழக அரசு ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை சிலர் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலர் சாமிநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, வட்ட வழங்கல் அலுவலர் மாதேஸ்வரி தலைமையில் துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று சின்னகவுண்டன்பாளையத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது, ஒரு லாரி மற்றும் வேனில் சுமார் 15 டன் எடைகொண்ட 310 மூட்டை ரேசன் அரிசியை வாகனங்களில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அதிகாரிகள் வருவதை கண்டதும் 7 பேர் கொண்ட அந்த கும்பல் மின்னல் வேகத்தில் தப்பி தலைமறைவாயினர்.

தப்பியோடியவர்களில், பவானியைச் சேர்ந்த லாரி டிரைவர் தர்மலிங்கம் மற்றும் வேன் டிரைவர் முருகேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, வேன் மற்றும் 15 டன் அரிசியும் பறிமுதல் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+