ஜெகன்மோகன் ரெட்டி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஆந்திர அமைச்சரிடம் சி.பி.ஐ. விசாரணை

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆந்திர அமைச்சர் மொபிதேவியிடம் சி.பி.ஐ. இன்று விசாரணை நடத்தியது.

தற்போதைய கிரண்குமார்ரெட்டி அமைச்சரவையில் கலால்துறை அமைச்சராக உள்ள மொபிதேவி, முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டியின் அமைச்சரவையில் உள்கட்டமைப்புத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன்மோகன்ரெட்டிக்கு சாதகமான சில முடிவுகளை அவர் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படுவது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

மன்மோகன்சிங் ஆஜர்

அமைச்சர் மொபிதேவியுடன் அவரது செயலாள்ராக இருந்த மன்மோகன்சிங் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் விசாரணைக்கு ஆஜரானார்.

ஜெகன்மோகன் ரெட்டி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மொத்தம் 6 அமைச்சர்கள், 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 12-ந் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அதில் மொபிதேவியும் மன்மோகன்சிங்கும் அடக்கும். உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியவர்களில் முதல் விசாரணையும் இருவரிடமும் நடத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+