பிரதமரை நேரில் பார்த்து நன்றி சொல்லப் போகிறார்கள் காங். எம்.பிக்கள்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்போம் என்று நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங் பதில் சொல்லாத நிலையில், அவர் நேற்று லோக்சபாவில் சமர்ப்பித்த அறிக்கைக்கு நன்றி சொல்வதற்காக அவரை தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் இன்று நேரில் சந்திக்கவுள்ளனராம்.
தமிழக காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான ஞானதேசிகன் தலைமையில் ஒரு குழுவாக அவர்கள் செல்கிறார்கள். பிரதமரை மட்டுமல்லாமல், வருங்கால பிரதமர் என்று காங்கிரஸாரால் வர்ணிக்கப்படும் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் பார்த்து விட்டு வரப் போகிறார்களாம்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக இன்று ராஜ்யசபாவிலும் அறிக்கை வாசிக்கவுள்ளார் பிரதமர். அனேகமாக நேற்று வாசித்த அறிக்கையையே அவர் இங்கும் வாசிப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications