கூடங்குளம் விவகாரத்தில் மத்திய அரசுடன் சேர்ந்து தமிழக அரசு நாடகம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அங்குள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 250 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா தார்மீக ஆதரவு அளித்ததுடன், கூடங்குளம் பகுதி மக்களின் பயம் போக்கப்படாத வரை அணுஉலைப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று கூறி கடந்த செப்டம்பர் 22ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.
ஆனால் அமைச்சரவைக் கூட்ட தீர்மானத்தை மதித்து, அங்குள்ள மக்களின் அச்சத்தைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசாலும், மாநில அரசாலும் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுக்கள், கூடங்குளம் பகுதி மக்களை ஒருமுறை கூட சந்திக்காமல், குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து தயாரித்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அணுமின் நிலையத்தை திறக்க கூடாது என்று கூறி வந்த ஜெயலலிதா, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவில், அணுஉலைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் எம்.ஆர்.சீனிவாசனை உறுப்பினராக சேர்த்த போதே மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நாடகம் ஆடுகின்றனவோ என்ற எண்ணம் எழுந்தது.
இரு அரசுகளும் இணைந்து நடத்திய நாடகம் தற்போது வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அரசுடன் பேசி முடித்து அணுமின் நிலையத்தை திறக்க முடிவு செய்த முதல்வர் ஜெயலலிதா, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக இத்தனை நாள் பொறுத்திருந்தார்.
தேர்தல் முடிந்த அடுத்த நாளே கூடங்குளம் அணுமின் நிலைய திறப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காவல்துறையை கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அரசின் இந்த முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது. மக்களை ஒடுக்குவதாக நினைத்துக் கொண்டு கூடங்குளத்தை நந்திகிராம் மற்றும் சிங்கூராக மாற்றிவிடக் கூடாது.
கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அணுமின் நிலையத்தை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். அங்கு குவிக்கப்பட்டுள்ள காவல் துறையினரை திரும்ப பெறுவதுடன், கைது செய்யப்பட்ட போராட்டக் குழுவினரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications