இடைத்தேர்தல் முடிந்த கையோடு தமிழக அமைச்சரவையை மாற்றும் ஜெயலலிதா?

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: தமிழக அமைச்சரவை வரும் மார்ச் 22 ம் தேதி அதாவது நிறைந்த அமாவாசையன்று மாற்றியமைக்கப்பட உள்ளதாக வெளியான செய்தியை அடுத்து அமைச்சர்கள் பலர் கவலையில் ஆழந்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டார். அதையடுத்து அவரால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஜெயலலிதா அதிரடியாக மாற்றுவார் என பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் சசிகலாவின் கணவர் நடராஜன், உறவினர்கள் ராவணன், திவாகர், மகாதேவன், ராமசந்திரன் ஆகியோரது தீவிர விசுவாசிகளை மட்டுமே அவர் மாற்றினார். இந்த நிலையில் சஙகரன்கோவில் இடைத்தேர்தல் வந்ததால் அமைச்சரவை மாற்றியமைக்கும் முடிவு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து விட்டதால் அமாவாசை தினமான மார்ச் 22ம் தேதி அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் அறிந்த அமைச்சர்கள் பலர் நாம் மீண்டும் அமைச்சராக இருப்போமா அல்லது மாற்றப்படுவோமா என்ற கவலையில் மூழ்கியுள்ளனர்.

ஆனால, தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளதால் அது முடிந்த பிறகே அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதனால் அமைச்சர்கள் தரப்பு கொஞ்சம் ஆறுதல் அடைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+