உசிலம்பட்டியில் தேர்வின்போது விடைத்தாள்களை மாற்றி சிக்கிய 2 பிளஸ் டூ மாணவர்கள்
மதுரை: உசிலம்பட்டியில் பிளஸ் டூ கணித தேர்வு எழுதும்போது விடைத்தாள்களை மாற்றி முறைகேட்டில் ஈடுபட்ட 2 மாணவர்கள் கையும், களவுமாகப் பிடிபட்டனர்.
தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று கணித தேர்வு நடந்தது. மாணவர்கள் காப்பியடிப்பதைத் தடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாகராஜ முருகன் தலைமையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் அடங்கிய பறக்கும்படையினர் தேர்வு மையங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் உசிலம்பட்டியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றனர். அங்கு தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவ-மாணவியரை சோதனை செய்தனர். அப்போது ஒரு அறையில் தேர்வு எழுதிய 2 மாணவர்கள் விடைத்தாள்களை மாற்றியுள்ளனர். அந்த நேரத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் சாந்தமூர்த்தி தலைமையிலான பறக்கும்படையினர் அந்த 2 மாணவர்களையும் கையும், களவுமாகப் பிடித்தனர்.
இதையடுத்து முதன்மை கல்வி அதிகாரி நாகராஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது.
இது குறித்து நாகராஜ் கூறுகையில்,
முறைகேட்டில் ஈடுபட்ட 2 மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். அவர்கள் கணித தேர்வு தவிர மற்ற தேர்வுகளை எழுதலாம். விசாரணை முடிந்த பிறகு மேல் நடவடிக்கை குறித்து விசாரணை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications