கூடங்குளம் போராட்டக் குழு... யார் யார் மீது எத்தனை வழக்குகள்?

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கூடங்குளம் போராட்டக் குழுவினர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் உதயக்குமார் மீதுதான் அதிகபட்சமாக 55 வழக்குகளை போட்டுத் தாக்கியுள்ளனர்.

போராட்டக்குழு ஓருங்கிணைப்பாளர் உதயகுமார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக போராட்டங்கள் தொடர்பாக போலீசார் பதிந்துள்ள வழக்குகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி அனுமதியின்றி நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களிலும் மொத்தம் 240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. போராட்ட குழுவை சேர்ந்த அனைவர் மீதும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போராட்டகுழுவை சேர்ந்த ஓருங்கிணைப்பாளர் உதயகுமார் மீது 55 வழக்குகளும், வக்கீல் சிவசுப்பிரமணியன் மீது 44 வழக்குகளும், போராட்டகுழு உறுப்பினர் ரவி மீது 33 வழக்குகளும், கூடங்குளம் பஞ்சாயத்து தலைவர் சண்டல் முத்துகுமார் மீது 33 வழககுகளும், பாஜ நிர்வாகி ராஜலிங்கம் மீது 34 வழக்குகளும், சேரன்மகாதைவி பாதிரியார் ஜேசுராஜன் மீது 22 வழக்குகளும், கூட்டப்புளி பாதிரியார் சுசிலன், கூடங்குளம் பாதிரியார் சடேயூஸ்ராஜன் ஆகியோர் மீது தலா 4 வழக்குகளும் மற்றும் பலர் மீது பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உதயகுமார், புஷ்பராயன், மைபா ஜேசுராஜன் ஆகிய 3 பேர் மீதும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தேசிய நலனுக்கு எதிராகவும் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உதயகுமார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் இடிந்தகரையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+