குஜராத் சட்டசபையில் பெண்களின் ஆபாச படம் பார்த்த 2 பாஜக எம்எல்ஏக்கள்!

சங்கர்பாய் லகாதிர்பாய் செளத்ரி, ஜேதாபாய் கெலாபாய் அகிர் பர்வாட் ஆகிய இருவர் தான் இந்த பாஜக எம்எல்ஏக்கள் ஆவர்.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, நீர்வளத்துறை அமைச்சர் எழுந்து பதில் சொல்லிக் கொண்டிருக்க, இந்த இருவரும் ஆபாச படங்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதை ஒரு தனியார் செய்தித் தொலைக்காட்சி படமும் பிடித்துள்ளது. இவர்கள் ஆபாச படங்கள் பார்த்ததை முதலில் கண்ட குஜராத் பத்திரிக்கையின் நிருபர் ஜானக்பாய் புரோகித் கூறுகையில்,
முதலில் இந்த இரு எம்எல்ஏக்களும் சுவாமி விவேகானந்தரின் படத்தை பார்த்தனர். ஆனால், அதைத் தொடர்ந்து பெண்களின் ஆபாசமான படங்களை பார்க்க ஆரம்பித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நான் அங்கிருந்த மற்ற நிருபர்களிடம் கூற, ஒரு தொலைக்காட்சி நிருபர் அதை படம் பிடித்தார்.
இதையடுத்து சபாநாயகரின் பி.ஏவிடம் சென்று இந்த இரு பாஜக எம்எல்ஏக்களும் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருப்பதைக் கூறினேன். ஆனால், அதற்குப் பிறகும் அவர்கள் தொடர்ந்து அந்தப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பின்னர் சபாநாயகர் தலையிட்டு அந்த ஐ-பேடை அங்கிருந்து அகற்றச் செய்தார் என்றார்.
இது தொடர்பான செய்தி இன்று குஜராத் மீடியாக்களில் வெளியானது. இதையடுத்து இன்று இந்த விவகாரம் சட்டசபையில் வெடித்தது. பாஜக-காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில்,
பாஜக ஆளும் மாநிலங்களில் ஜனநாயகத்தின் கோவில்களான சட்டமன்றங்கள் அவமதிக்கப்பட்டு வருவது கவலை தருகிறது. இது தான் அவர்களது உண்மையான சுயரூபம் என்றார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications