வெறும் 406 வாக்குகளில் டெபாசிட்டைப் பறி கொடுத்த திமுக

Subscribe to Oneindia Tamil

Jawahar suriyakumar
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வெறும் 406 ஓட்டுக்களில் டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளது திமுக.

கடந்த சட்டசபைப் பொதுத் தேர்தலில் ஆட்சியை அதிமுகவிடம் பறி கொடுத்த திமுக, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை தேமுதிகவிடம் பறி கொடுத்தது.

இதனால் தமிழகத்தின் 3வது பிரதான எதிர்க்கட்சியாக இருந்து வரும் திமுக, அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடந்த முதல் இடைத் தேர்தலான திருச்சி மேற்கில், அதிமுகவுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்துப் போட்டியிட்டது.

ஆனால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அப்படியே தலைகீழாக உள்ளது நிலைமை. மிக மோசமான முறையிலான தோல்வியை திமுக தழுவியுள்ளது. இத்தனைக்கும் அதிமுகவை விட்டு தேமுதிக பிரிந்து போட்டியிட்டது. மதிமுகவும் களத்தில் குதித்தது. இருப்பினும் திமுக அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் பெரும் தோல்வியைத் தழுவி டெபாசிட்டையும் பறி கொடுத்துள்ளது.

வெறும் 406 ஓட்டுக்களில்தான் திமுகவுக்கு டெபாசிட் பறிபோயுள்ளது. இந்த ஓட்டுக்களைப் பெற்றிருந்தால் அக்கட்சி வேட்பாளர் ஜவஹர் சூரியக்குமார் டெபாசிட்டைத் திரும்பப் பெற்றிருப்பார்.

அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடந்த இடைத் தேர்தலில் திமுக டெபாசிட்டைப் பறிகொடுப்பது இதுவே முதல் முறையாகும்.

திருச்சி மேற்குத் தொகுதியில் கூட நல்ல பைட் கொடுத்த திமுக, சங்கரன்கோவில் குப்புறடித்து விழுந்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+