For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனித உரிமை பத்தித் தெரியனுமா, ராஜபக்சே சொல்வதை கேட்டுட்டுப் போங்க!

Google Oneindia Tamil News

Rajapakse
கொழும்பு: 2500 ஆண்டு காலமாக பெளத்தம் மற்றும் பிற மதங்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட எங்களது நாட்டுக்கு மனித உரிமைகள் குறித்து யாரும் போதிக்கத் தேவையில்லை என்று ராஜபக்சே பேசியுள்ளார்.

இதுகுறித்து ராஜபக்சே சொல்லியுள்ளதாவது...

பௌத்த மற்றும் ஏனைய மதங்களினால் போஷிக்கப்பட்டு வரும் இலங்கையர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பாக எவரும் தனியாக பாடம் நடத்த வேண்டியதில்லை.

30 ஆண்டுகால போரை முடித்து மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு வெளிநாட்டு சக்திகளின் தலையீடு அவசியமில்லை.

நாட்டுக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும். 2500 ஆண்டுகள் பௌத்த மற்றும் ஏனைய மத வரலாற்றைக் கொண்ட இந்த நாட்டு மக்களுக்கு மனித உரிமை குறித்து சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

பேசாமல் இனிமேல் அத்தனை பேரும் ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே போன்றோரிடம் மனித உரிமைகள் என்றால் என்ன என்று டியூஷன் எடுத்துக் கொள்ளலாம் போல...

English summary
Lankan dictator Rajapakse has said that his country is following Buddhism and other relegions for 2500 years. So no one need to teach about human rights to them, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X