கூடங்குளம் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வாக ரூ40 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

கூடங்குளம் அணு மின் நிலைய பணிகள் தொடங்கினாலும் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ராதாபுரம், வள்ளியூர் பஞ்சாயத்து யூனியன்களை சேர்ந்த 11 கிராம பஞ்சாயத்து தலைவர்களை அழைத்துப் பேசினர்.
இதில் கூடங்குளம் சுற்றுவட்டார கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் குடிநீர் பிரச்சனையை பஞ்சாயத்து தலைவர்கள் முன்வைத்தனர். இதையடுத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செயல்படுத்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தைப் போலவே பொதுமக்கள் பயன்படும் வகையில் மற்றுமொரு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை பொறுத்தவரை கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமே அணு மின் நிலையம், அணு விஜய் டவுன் ஷீப் ஆகிய பகுதிகளில் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நாள் ஓன்றுக்கு 76 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பெறப்படுகிறது. இது போன்ற ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் ராதாபுரம் பகுதியில் உள்ள 11 கிராம பஞ்சாயத்து மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என நம்பப்படுகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.500 கோடிக்கான வளர்ச்சித் திட்டப் பணிகளில் முதன்மையாக ரூ40 கோடியில் இந்த திட்டம செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications