நிதிநிலை அறிவிப்புகளை நிறைவேற்ற கடினமான முடிவுகளை மத்திய அரசு மேற்கொள்ளும்: பிரணாப் முகர்ஜி

டெல்லியில் நடந்த தொழில் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
மத்திய நிதிநிலை அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்து இருக்கிறோம். அறிவிப்புகளை அறிவித்து விட்டு, அவற்றை நிறைவேற்றாமல் இருந்து விட முடியாது. இவை நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாட்டு மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
எனவே, சில துறைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்களை நிறுத்த அல்லது குறைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். பல்வேறு பற்றாக்குறையை சரிகட்ட வேண்டிய நிலையிலும் இருக்கிறோம்.
வரும் மாதங்களில் மத்திய அரசு சில கடினமான முடிவுகளை எடுத்து, அதை நிறைவேற்ற வேண்டியது இருக்கிறது. இதை தவிர வேறு வழி கிடையாது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 125 டாலராக உயர்ந்து விட்டது. இதனால் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர அதிக பட்ச வாய்ப்பு இருக்கிறது.
மேலும் நாட்டில் கடந்த 3 மாதங்களாக பண வீக்கமும் அதிகரித்து விட்டது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வங்கிகளின் வட்டி விகிதங்கள் இன்னும் குறைக்கப்பட வேண்டும். அப்போது தான் தொழில்கள் வளர்ச்சி அடையும். சரியான திட்டமிடலும், செயல்படுத்தலும்தான், பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தொழில் அதிபர்களின் ஆதரவு முக்கியமானது என்றார் அவர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications