தொழில்துறையை ஊக்குவிக்க ஜெனரேட்டர்கள் வாங்க ரூ. 5 லட்சம் மானியம்- தமிழக அரசு
சென்னை: குறு, சிறு மற்றும் நடுத் தர தொழில் நிறுவனங்களுக்கு ஜெனரேட்டர்கள் வாங்க ரூ. 5 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான மேம்பாட்டிற்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்களின் பங்கு முக்கியமானதாகும். இந்த நிறுவனங்கள் அதிக அளவு வேலை வாய்ப்பினை ஏற்படுத்துகின்றன என்பதால், இதன் வளர்ச்சிக்காக பல்வேறு சலுகைகளை முதலமைச்சர் ஜெயலலிதா அளித்து வருகினறார்.
தற்பொழுது நிலவி வரும் மின்பற்றாக் குறையிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் தொடர்ந்து உற்பத்தியை பெருக்க, அந்நிறுவனங்கள் நிறுவும் மின்னாக்கிகளுக்கு அதிக அளவு மானியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே 125 கேவிஏ திறன் கொண்ட மின்னாக்கிகளை உபயோகப்படுத்தும் நிறுவனங்களுக்கு, அதன் விலையில் 25 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மானியமாக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வரும் 125 கேவிஏ திறன் கொண்ட மின்னாக்கிகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் உற்பத்திக்கு போதுமானதாக இல்லை என்பது தெரிய வருகின்றது.
இதனால், தற்போது 320 கேவிஏ திறன் வரை கொண்ட மின்னாக்கிளை நிறுவவும், மானிய உச்சவரம்பினை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயி லிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த சலுகைகள் 11.11.2008 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். மேலும், இந்த சலுகையை பெற விண்ணப்பிக்காத நிறு வனங்களும் பயன் பெறும் வகையில், அந்நிறுவனங்கள் புதிதாக விண்ணப்பிக்க மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஜெனரேட்டர், மானியம், தமிழக அரசு, அறிவிப்பு.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications