டெல்லியில் அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்- ஆதரவாளர்கள் திரண்டனர்!

வலுவான லோக்பால் மசோதா கோரி கடந்த ஆண்டு தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை ஹசாரே நடத்தினார். இதைத் தொடர்ந்து மத்திய அரசும் லோக்பால் மசோதாவை கொண்டுவந்தது. மாநிலங்களவையில் அது நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில் ஊழலை ஒழிக்கப் போராடி உயிரிழந்தவர்களுக்கு நீதிகேட்டும் மத்திய அரசின் லோக்பால் மசோதாவை மேலும் வலுவாக்கக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் தமது ஆதரவாளர்களுடன் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதில் மத்திய பிரதேசத்தில் மணல் மாபியாவால் கொல்லப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரியின் உறவினர்கள், தமிழ்நாட்டில் மணல் மாபியாக்களால் கொல்லப்பட்ட இளைஞர் சதீஷ்குமாரின் தந்தை என ஊழலை ஒழிக்கப் போராடி உயிர்நீத்தோர் குடும்பத்தினரும் அன்னா ஹசாரே ஆதரவாளர்களும் நாடு முழுவதுமிருந்து திரண்டு வந்து பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக காந்தி நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்துவிட்டு உண்ணாவிரதம் நடைபெறும் ஜந்தர் மந்தருக்கு தமது ஆதரவாளர்களின் வந்தே மாதரம் முழக்கங்களுடன் வந்தடைந்தார்.
உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்பா செய்தியாளர்களிடம் ஹசாரே பேசியதாவது:
ஊழலுக்கு எதிராகப் போராடி உயிரிழந்தோரின் பெற்றோர், குழந்தைகள், மனைவிகள் நீதி கோரி நிற்கின்றனர். ஆனால் அரசாங்கமோ அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. இது மிகப்பெரிய போராட்டம். இதனை அரசு கவனித்தாக வேண்டும். தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை அரசு கொண்டுவருகிறது. மக்களோ அதனை மேம்படுத்துவதற்காக உயிர்துறக்கின்றனர் என்றார் அவர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications