பாதுகாப்பு அமைச்சகம்- ராணுவ தலைமை தளபதி இடையே தொடரும் "யுத்தம்"
டெல்லி: பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்குக்கும் இடையேயான மோதல் தொடர்கிறது. இப்போதைய சர்ச்சை அசாம் ரைபிள்ஸ் படையின் தலைமை இயக்குநராக யாரை நியமிப்பது என்பதில்தான்!
தமது பிறந்தநாள் தேதி விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சகத்துடன் முரண்பட்டு உச்சநீதிமன்றத்துக்கு சென்றார் தலைமை தளபதி வி.கே.சிங். ஒருவழியாக உச்சநீதிமன்றத்தில் அவர் குட்டுப்பட்டு பிரச்சனை ஓய்ந்தது.
இந்நிலையில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் தலைமை இயக்குநர் பதவிக்கு லெப். ஜெனரல் ஏ.கே.செளத்ரி பெயரை வி.கே.சிங் பரிந்துரைத்திருந்தார். இதை பாதுகாப்பு அமைச்சகத்துக்கு கொண்டு செல்லாமல் நேரடியாக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியிருந்தார் சிங்.
பாதுகாப்பு அமைச்சகத்துக்குத்தான் எந்த ஒரு பரிந்துரையையும் அனுப்ப வேண்டும். அந்த அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு இதர அமைச்சகங்களுக்கு பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால் அசாம் ரைபிள்ஸ் படையை உள்துறை அமைச்சகம்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதால் நேரடியாக வி.கே.சிங் அணுகியிருக்கிறார்.
ஆனாலும் பாதுகாப்பு அமைச்சக செயலாளரோ அல்லது பாதுகாப்பு அமைச்சகத்தின் எந்த ஒரு பிரிவுமே ஒப்புதல் அளிக்காத நிலையில் வி.கே.சிங்கின் பரிந்துரையை பரிசீலிக்கக் கூடாது என்று உள்துறை அமைச்சகத்தை பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
மேலும் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவுக்கான தலைமை இயக்க்குநர் பதவிக்கு புதிய பெயரை பரிந்துரை செய்யவும் ராணுவத்திடம் பாதுகாப்பு அமைச்சகம் கோரியது. ஆனால் இதுவரை ராணுவத்தரப்பு எந்த ஒரு பதிலையும் தெரிவிக்காமல் உள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications